சளி பிரச்சனையை அடியோடு விரட்டணுமா? கருந்துளசியை கட்டாயம் சாப்பிடுங்க
குளிர்காலத்தில் கருந்துளசி என்னென்ன நன்மையை அளிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே பெரும்பாலான நபர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகள் வரிசையாக வந்து தொல்லை கொடுக்கின்றது.
இவ்வாறு ஏற்படும் தொற்றுக்குள் நுரையீரலிலும் தொற்றை ஏற்படுத்திவிடுகின்றது. நுரையீரல் பகுதி வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு இயற்கையாக நமது உடம்பில் உருவாகும் சளியானது, அதிகமாகிவிட்டால் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்நிலையில் கருந்துளசி என்னென்ன பிரச்சனைகளை சரிசெய்யும் என்பதை தெரிந்து கொள்வோம்.

துளசியில் இவ்வளவு நன்மையா?
சளியை விரட்டும் சிறந்த மூலிகையில் ஒன்றாக கருந்துளசி இருக்கின்றது. அசிமம் டெனியபுளோரம் டைப்பிகா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இதன் இலைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்றது.
கருந்துளசி இலைகளை சிலவற்றை எடுத்து கழுவி பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால், ஒவ்வாமை பிரச்சனையால் ஏற்படும் சளியை அகற்றுகின்றது. அதுவே நீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் சளியும் நீங்குகின்றது.

சிறிது மிளகை 10 துளசி இலையுடன் மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி காணாமல் போகும்.
அதுவே 5 துளசி 5 மிளகு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சலிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆயுர்வேதத்தில் துளசி முக்கியமாக இருக்கின்றது. இதில் 12 வகையான திரவங்கள் நிறைந்துள்ளதுடன், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது, குளுக்கோஸ் அளவை சரியான அளவில் வைப்பது, கொழுப்பை கட்டுக்குள் வைப்பது என நன்மையினை கொடுக்கின்றது.

மேலும் துளசியினை தினமும் 4 எடுத்துக் கொண்டால் வயிற்றுகோளாறு சரியாகும். துளசியில் உள்ள ரேடியேஷன் பாய்சன் என்ற ஆற்றல்மிக்க ரசாயனம் சரும தொற்று, சிறுபூச்சியின் விஷக்கடி, வழித்திரை கோளாறுக்கும் தீர்வு அளிக்கின்றது.
முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் துளசி சாறு எடுத்து பருக்களில் வைத்தால் பரு சரியாகும், மேலும் உடல் சிராய்ப்பு போன்ற காயங்களுக்கும் இதனை பயன்படுத்தலாம்.
இயற்கைக்கு சிறந்த நண்பனாக துளசி விளங்குகின்றது. அதாவது சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கவும், ஓசோன் படலத்தில் பாதிப்பை சரி செய்யவும் செய்கின்றது.
கருந்துளசி இலையுடன் சிறிது பச்சை மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து சாப்பிட்டால் சிலந்திகடி நஞ்சு கூட முறிக்குமாம்.

உடம்பில் உள்ள தாது பிரச்சனையை தீர்ப்பதற்கு இரவில் செம்பு அல்லது பஞ்ச உலோக பாத்திரத்தில் 10 துளசி இலையினை நசுக்கி போட்டு, அரை டம்ளர் தண்ணீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் சரியாகும்.
வாழ்நாள் முழுவதும் சளி, சுவாச பிரச்சனை வராமல் இருப்பதற்கு தொடர்ந்து கருந்துளசியை சில இலைகள் எடுத்துக் கொண்டால் சிறந்த தீர்வினை பெறலாம்.