உடலிற்கு சத்தான கருப்பு சுண்டல் வடை.., எப்படி செய்வது?
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், உடலிற்கு சத்தான சுண்டல் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு சுண்டல்- 1 கப்
- சோம்பு- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- புதினா- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கருப்பு சுண்டல் சேர்த்து 2 முறை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கருப்பு சுண்டல், சோம்பு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதனைதொடர்ந்து, அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
இறுதியாக அரைத்த கலவையை வடை போல் தட்டி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சத்தான கருப்பு சுண்டல் வடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |