இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி

United Kingdom Indian Origin
By Balamanuvelan Oct 16, 2026 05:55 AM GMT
Report

Dressed in all black, UK vigilantes bar Indian students from park: இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்களை ஒரு கும்பல் மிரட்டியுள்ளது.

இங்கிலாந்தில், இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய மாணவர்கள் சிலரை, கருப்பு உடை அணிந்த சிலர் மிரட்டியுள்ள விடயம் பேசுபொருளாகியுள்ளது.

பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள்

இங்கிலாந்தின் Chelmsley Wood என்னுமிடத்திலுள்ள Meriden பூங்காவுக்கு இந்திய மாணவர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர்.

அப்போது, கருப்பு உடை அணிந்த ஒரு கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டுள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட Chelmsley Wood Patriots என அழைத்துக்கொள்கிறார்கள். 

இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி | Black Dressed Uk Vigilant Bar Indian Students Park

யார் நீங்கள், எதற்காக இங்கிலாந்துக்கு வந்தீர்கள் என அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கேட்க, நாங்கள் மாணவர்கள், கல்வி கற்க இங்கிலாந்துக்கு வந்துள்ளோம் என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, இது பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் நேரம் செலவிடும் இடம். இங்கு மூன்று ஆண்கள் வந்து இருட்டில் உட்கார்ந்துகொண்டு வீடியோ எடுக்கும் இடம் அல்ல என்று கூறியுள்ளனர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். 

லண்டனில் சாலையோரமாக விழுந்து கிடந்த இளவரசி

லண்டனில் சாலையோரமாக விழுந்து கிடந்த இளவரசி

அத்துடன், இங்கெல்லாம் நீங்கள் வரக்கூடாது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள், இது உங்களுக்கு கடைசி எச்சரிக்கை, அடுத்த முறை உங்களுக்கு எச்சரிக்கை எல்லாம் இருக்காது, சிறார் பூங்காவுக்கெல்லாம் வராதீர்கள் என மிரட்டியும் உள்ளது அந்த கும்பல்.

அது மட்டுமின்றி, இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அந்த கும்பல், தாங்கள் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக இரவில் ரோந்து செல்வதாகவும், அப்போது மூன்று இளைஞர்களைக் கண்டு, மரியாதையுடன் அவர்களை அங்கிருந்து போகச் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அந்த மாணவர்களின் தோலின் நிறத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் மிரட்டப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர் உள்ளூர் சமூக ஆர்வலர்கள்.

மேலும், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரும் இந்த விடயம் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் தக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US