ரொறன்றோ குப்பைத்தொட்டியில் சிறுமியின் சடலம்: கனேடிய பொலிஸை அதிரவைத்துள்ள சம்பவம்!
கனடாவின் ரொறன்றோவில், குப்பைத் தொட்டியில் கறுப்பினச் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊடக அறிக்கையின்படி, சிறுமியின் வயது நான்கு முதல் ஏழு வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரொறொன்ரோவின் ரோஸ்டேல் பகுதியில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் ஆய்வு செய்துவருகின்றனர். சிறுமி இறந்து ஒரு வருடம் இருக்கலாம் என்றும், உடலில் சிதைவு நிலையின்படி அவர் கடந்த கோடையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
சிறுமி ஆப்பிரிக்க அல்லது கலப்பு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர், மூன்றரை அடி உயரம் இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் அதிநவீன டாங்கியை அழித்த உக்ரைன்! சீரமைக்க ரஷ்யாவுக்கு காத்திருக்கு சவால்...
ஏப்ரல் 28 மற்றும் மே-2 க்கு இடையில் ஒரு கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் சடலம் வீசப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த இடம் நெடுஞ்சாலைக்கு அருகில் மற்றும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் உள்ளது.
குப்பைத்தொட்டியை நேரடியாக எதிர்கொள்ளும் கேமராக்கள் எதுவும் இல்லாத போதிலும், அப்பகுதியில் கிடைக்கும் அனைத்து சிசிடிவி வீடியோ காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரொறன்ரோ மேயர் ஜான் டோரி இது "சொல்ல முடியாத சோகம்" என்று விமர்சித்துள்ளார்.
"குழந்தைகள் தானாக இறந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச் சிறுமியின் அடையாளத்தை நிறுவுவதே இப்போது எங்களின் முதல் முன்னுரிமை. புலனாய்வாளர்கள் சிறு ஆதாரத்தையும் விட்டுவிட மாட்டார்கள்” என்று காவல்துறை ஆய்வாளர் ஹாங்க் இட்சிங்க கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022