உடல் வலுபெற கருப்பு உளுந்து புட்டு: எப்படி தயாரிப்பது?
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- அரிசி- 1/2 கப்
- தேங்காய் துருவியது- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை- 3/4 கப்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இவை இரண்டையும் நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து சலித்து கொள்ளவும்.
பின் சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு போல் உதிரி உதிரியாக பிணைந்து கொள்ளவும்.
பின் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, இட்லி தட்டில் துணி போட்டு புட்டு மாவு மற்றும் 1/4 கப் தேங்காய் சேர்த்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நெய், நாட்டுச்சர்க்கரை, 1/4 கப் தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பரிமாறினால் ஆரோக்கியமான கருப்பு உளுந்து புட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |