உடலிற்கு சத்தான மொறுமொறு கருப்பு உளுந்து முறுக்கு.., எப்படி செய்வது?
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், சத்தான மொறுமொறு கருப்பு உளுந்து முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- அரிசி மாவு- 1 கப்
- உப்பு- 1 ஸ்பூன்
- எள்ளு- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கருப்பு உளுந்து சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நினைக்க அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, எள்ளு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதற்கடுத்து இதில் சூடு செய்த 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகள் வைத்து மாவை பிணைந்துகொள்ளவும்.
பின்னர் இதில் வேகவைத்து அரைத்த உளுந்தை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிணைந்து கொள்ளவேண்டும்.
இதனைத்தொடர்ந்து அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
இறுதியாக பிணைந்த மாவை முறுக்கு போல் பிழிந்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் கருப்பு உளுந்து முறுக்கு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |