உடல் எலும்பிற்கு வலு சேர்க்கும் கருப்பு உளுந்து சோறு: எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான உளுந்து சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி-1 கப்
- கருப்பு உளுந்து-½ கப்
- சீரகம்- 2 ஸ்பூன்
- பூண்டு- 20
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- 1 கொத்து
- தேங்காய்- 1 கப்
- பெருங்காயம்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து கழுவி 1 மணி நேரம் நன்கு ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
அடுத்து அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து மூடிபோட்டு வேகவைக்கவும்.
அரிசி மற்றும் கருப்பு உளுந்து பாதி வெந்து வரும் வேலையில் அதில் பூண்டு சேர்த்து வேகவைக்கவும்.
இதற்கடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் கருப்பு உளுந்து சோறு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |