வெப்ப அலை எச்சரிக்கை... இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்
அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
40Cயை நெருங்கும்
நிலக்கரியில் இயங்கும் பெரிய மின் நிலையங்களில் ஏற்படும் மின் தடைகளும் வெப்ப அலைகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிட்னியின் சில பகுதிகள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 40Cயை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி வாரம் முழுவதும் வெப்பநிலை 30C என தொடரும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை குறைந்த அளவு முதல் கடுமையான தீவிர நிலை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திங்களன்று மதியத்திற்கு மேல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மொத்தமாக இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அதிக வெப்பநிலை, அதிகரித்த மின்சாரத் தேவை, ஏற்பட்டுள்ள சில உற்பத்தித் தடைகள் காரணமாக
மின் நிலையங்கள் இயங்கவில்லை
செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின்சார விநியோகம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது என்றே Aemo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணி முதல் இரவு 10.30 வரையில் மின்சாரம் தடைபடும் நிலை இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஆறு ஜிகாவாட் நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் இயங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |