ஜேர்மனியில் வெற்று கேன்வாஸ் ஏலம்., ஆரம்பவிலை ரூ.30 கோடி
கலை உலகில் புதிய சர்ச்சைகளை கிளப்பும் வகையில், ஜேர்மனியில் ஒரு வெற்று கேன்வாஸ் ஏலத்தில் இடம் பெற உள்ளது.
இதன் ஆரம்ப விலை 1 மில்லியன் டொலராக (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.30 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ஒரு வாழைப்பழத்தை டேப்பைக் கொண்டு சுவர் மீது ஒட்டிய Comedian எனும் கலைப்படைப்பு கலைப்பணி 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.170 கோடி) விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த கேன்வாஸ், அமெரிக்க கலைஞர் ராபர்ட் ரைமன் (Robert Ryman) என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இவரது வாழ்க்கை காலம் 1930 முதல் 2019 ஆகும்.
General எனப் பெயரிடப்பட்ட இந்த படைப்பின் பரிமாணம் 52 x 52 அங்குலம் ஆகும்.
இந்த வெண்மையான கேன்வாஸ் வெறும் வெற்றிடம் அல்ல, இது பல அடுக்குகளாக வெள்ளை எனாமல் பூச்சுடன் வரைந்த ஒரு பரந்த கலை வடிவமாகும்.
ஒவ்வொரு அடுக்குகளும் காயும் முன், அதில் oil மற்றும் pigments-உடன் கலந்த கண்ணாடி துகள்கள் பூசப்பட்டுள்ளது.
தனது இந்த கலைப்படைப்பைப் பற்றி கூறியுள்ள ரைமன், “நான் வெள்ளை ஓவியத்தை உருவாக்குவதாக நினைக்கவில்லை. நான் ஓவியங்கள் வரைகிறேன்; நான் ஒரு ஓவியன். வெள்ளை பெயிண்ட் என் ஊடகம். இதில் நிறம் நிறைய இருக்கிறது. சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களை நான் குறிப்பிடவில்லை; ஆனால், நிறம், அந்த அர்த்தத்தில்.," என விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜேர்மனியின் Ketterer Kunst ஏல நிறுவனத்தின் வழியாக விற்பனை செய்யப்படும் இந்த படைப்பின் விலை 1.5 மில்லியன் யூரோவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 1971-ஆம் ஆண்டு முதல்முறையாக நியூயார்க் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
General என்ற தலைப்பில் 15 படைப்புகள் கொண்ட தொடர் கலைக்கூட்டத்திலேயே இந்த கேன்வாஸ் இடம்பெற்றுள்ளது. இதன் மற்ற சில படைப்புகள் நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்திலும் மற்றும் பல முக்கிய அருங்காட்சியகங்களிலும் உள்ளன.
ராபர்ட் ரைமன் தனது படைப்புகளால் கலைச் சொற்களையும், அதன் எல்லைகளையும் மறுபரிசீலனை செய்யும் விதமாக கலை உலகில் தனித்துவம் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |