ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்
ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், அங்கு திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கினர்.
புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து
ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz in der Nordheide என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று உள்ளது.
அங்கு தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், மைய அலுவலர்கள் இருவரை அழைத்துக்கொண்டு விசாரணைக்காக அந்த கட்டிடத்துக்குள் சென்றுள்ளனர். அப்போது, பெட்ரோல் வசானை வீசுவதை உணர்ந்த பொலிசார் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்குள் திடீரென ஏதோ பயங்கரமாக வெடித்துள்ளது.
இந்த வெடிவிபத்தில், அந்த பொலிசார், மைய அலுவலர்கள் உட்பட, 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க, கட்டிடத்துக்குள் ஒரு பெண்ணின் உயிரற்ற உடல் கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
யார் அந்தப் பெண், எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |