பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பாரிஸில் வெடிப்பு விபத்து
வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.
18வது அரோண்டிஸ்மென்ட்(Arrondissement) பகுதியில் இந்த சக்தி குறைந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த திடீர் வெடிப்பை தொடர்ந்து எத்தகைய தீ பரவல் சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் சுவர் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடம் சமீபத்தில் தான் மறு புதுப்பிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், மேலும் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நகர மையத்தில் இருந்த கட்டிடத்தில் கடந்த ஜூன் மாத ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தை தான் நினைவுப்படுத்துகிறது.
இந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |