ஜேர்மனியில் ரயில் நிலையம் அருகே வெடித்த மர்ம பொருள்: இருவர் படுகாயம்
Blast Near Germany Augsburg Station 2 Injured : ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க் ரயில் நிலையம் அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம் அருகில் வெடிப்பு
ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க்(Augsburg) பகுதியில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியது.
அடையாளம் தெரியாத மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு காது கேளாமை தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் நடைபாதையில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தினால் கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெடிப்பின் தாக்கம் காரணமாக அதன் அருகில் இருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.
காவல்துறையினர் விசாரணை
மர்மப் பொருள் வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆக்ஸ்பர்க் ரயில் நிலையத்தை முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
வெடி பொருள் குறித்து முழுமையாக ஆராய வெடிகுண்டு அகற்றும் ரோபோக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும், வெடிப்பு பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |