8 ஆண்டுகளுக்கு முன்னர் பேரழிவை சந்தித்த கனேடிய நகரம் தற்போதும் ஆபத்தில்
கடந்த 2016ல் காட்டுத்தீயால் பேரழிவை சந்தித்துள்ள ஆல்பர்ட்டா மாகாண நகரமொன்றில், தற்போதும் காட்டுத் தீ சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த மக்களும்
குறித்த நகரத்தின் நான்கு புறநகர் பகுதி மக்களை தற்போது வெளியேறும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். Fort McMurray நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளான Beacon Hill, Abasand, Prairie Creek மற்றும் Grayling Terrace ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தக் குடிமக்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என்றும், குடிமக்கள் அவர்களின் செல்லப்பிராணிகள், மருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான பொருட்களுடன் வெளியேற கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, நகரின் தென்மேற்கில் 9,600 ஹெக்டேர் பரப்பளவில் பரவிய காட்டுத்தீயை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய வெளியான தகவலின் அடிப்படையில் Fort McMurray நகரில் இருந்து 8 மைல்கள் தொலைவில் காட்டுத்தீ நெருங்கியுள்ளது.
50 இடங்களில் காட்டுத்தீ
மேலும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுத்தீயால் மொத்தமாக பாதிக்கப்பட்ட நகரில் மீண்டும் காட்டுத்தீயை எதிர்கொள்வது என்பது மிக சிக்கலான விடயம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2016ல் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 90,000 மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். நகரம் முழுவதும் சாம்பலால் மூடியது. காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதம் மட்டும் 9 பில்லியன் கனேடிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டது.
தற்போது ஆல்பர்ட்டா மாகாணம் முழுவதும் 50 இடங்களில் காட்டுத்தீ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதில் ஒன்று தற்போது Fort McMurray நகரை நெருங்கியுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |