கோபக்கார முதியவர்... ட்ரம்பை காரசாரமாக விமர்சித்துள்ள சுவிஸ் பத்திரிகை
வரிவிதிப்புகளால் உலகை அச்சுறுத்திவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, கோபக்கார முதியவர் (angry old man) என பிரபல சுவிஸ் பத்திரிகை விமர்சித்துள்ளது.
ட்ரம்பை விமர்சித்துள்ள சுவிஸ் பத்திரிகை
ட்ரம்பின் வரிவிதிப்புகள், அவர் மீது பல நாடுகளை கோபம் கொள்ளச் செய்துள்ளன.
பல நாடுகள் திருப்பி அடிக்கத் திட்டமிட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்து மீதான ட்ரம்பின் வரிவிதிப்பு வேடிக்கைக்குரிய விடயமாகியுள்ளது.
ஆம், அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அந்த வரியில் பாதியை அந்த நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்து அமெரிக்கப் பொருட்களுக்கு 61 சதவிகித வரி விதிப்பதாகக் கூறி, சுவிட்சர்லாந்துக்கு 31 சதவிகித வரி அறிவித்துள்ளார் ட்ரம்ப். ஆனால், அதனால் சுவிட்சர்லாந்து குழப்பமடைந்துள்ளது.
காரணம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து சரக்குகள் மீதான வரிகளையே ஒழித்துவிட்டது.
அப்படியிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து அமெரிக்கப் பொருட்களுக்கு 61 சதவிகித வரி விதிப்பதாகக் கூறி, சுவிட்சர்லாந்துக்கு 31 சதவிகித வரி அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஆகவே, சுவிட்சர்லாந்து மீதான ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து சுவிஸ் நிபுணர் ஒருவரை ப்ளிக் (Blick) பத்திரிகை விசாரிக்க, அவர் எதனால் இப்படி ட்ரம்ப் சுவிட்சர்லாந்து மீது வரி விதித்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும், இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, கோபக்கார முதியவர் என ப்ளிக் பத்திரிகை விமர்சித்துள்ளது.
அத்துடன், பேசாமல் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது அந்த பத்திரிகை.
விடயம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியமே ட்ரம்ப் வரி விதிப்பு தொடர்பில் பிரிந்து கிடக்கிறது, அதாவது வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |