25 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை தற்போது அரசு அதிகாரி
25 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை தற்போது அரசு அதிகாரி ஆன சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வைரல் சம்பவம்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ஜல்கான் ரெயில் நிலையத்தில் பார்வையிட்ட பெண் குழந்தை ஒன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்டது.
அந்த குழந்தையை மீட்ட பொலிஸார் ஜல்கானில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு பிரெய்லில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கப்பட்டது. பின்னர், போட்டி தேர்வுக்கு தயாரானார்.
தற்போது, 26 வயதைக் கடந்த மாலா கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் வைஸ்ன் கமிஷன் தேர்வை எழுதினார். இதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாக்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணி கிடைத்துள்ளது.
இவர் இதற்கு முன்னதாக இரண்டு முறை தாசில்தார் பணிக்கான தேர்வில் தோல்வி அடைந்தார். இருந்தாலும் கடினமாக படித்து இந்த தேர்வில் வெற்றி அடைந்தார்.
இவரது வழிகாட்டியான சங்கர் பாபா பாபால்கர் தான் தனது குடும்ப பெயரை மாலாவுக்கு சூடியுள்ளார். இவர் தற்போது பல குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |