Amazon-க்கு சொந்தமான Blink நிறுவனத்தின் முதல் 4K கமெரா அறிமுகம்
Blink Launches 4K Trail Camera XR+: Blink நிறுவனம் முதல் 4K கமெராவை அறிமுகப்படுத்தியது.
Amazon-க்கு சொந்தமான Blink நிறுவனம், தனது பாதுகாப்பு கமெரா வரிசையில் புதிய முன்னேற்றங்களை அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக Frontier XR+ எனப்படும் 4K Trail Camera, 7,000 அடி தூரம் வரை காட்சிகளை அனுப்பும் திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Frontier XR+:
இந்த கமெரா, Sync Module XR+ உடன் இணைக்கப்பட்டால், 7,000 அடி தூரம் வரை தெளிவான காட்சிகளை அனுப்ப முடியும். இது பண்ணை விலங்குகள், தொலைவில் உள்ள கதவுகள், வேலைத்தளங்கள் போன்ற இடங்களை கண்காணிக்க உதவும்.
Outdoor 2K XR+:
இது 115-டிகிரி பார்வை கோணத்துடன், 800 அடி (தடைகள் உள்ளபோது) அல்லது 2,700 அடி (தடைகள் இல்லாமல்) வரை காட்சிகளை அனுப்பும் திறன் கொண்டது.
Mini 4K+:
Blink நிறுவனத்தின் முதல் 4K Mini கமெரா. இது உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது. 115-டிகிரி பார்வை, IP65 நீர்ப்புகா தரம், Wi-Fi 6 ஆதரவு ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
Spotlight Cam 2K+:
இது அசைவை கண்டறிந்தவுடன் தானாகவே விளக்கை ஏற்றும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் பொருத்தலாம்.
Mini Pan-Tilt 2K+:
இந்த கமெரா 350 டிகிரி வரை சுழலும், 115 டிகிரி வரை சாயும் திறன் கொண்டது. 360-டிகிரி கவரேஜ் வழங்கும். இயக்கத்தை தானாகக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது.
விலை:
Frontier XR+ - 199.99 டொலர்
Outdoor 2K XR+ - 149.99 டொலர்
Mini 4K+ - 79.99 டொலர்
Spotlight Cam 2K+ -109.99 டொலர்
Mini Pan-Tilt 2K+ - 49.99 டொலர்
இவை தற்போது US, Canada, UK, Europe, Asia-Pacific பகுதிகளில் முன்பதிவு செய்யலாம். UAE மற்றும் சவுதி அரேபியாவில் விலை மற்றும் கிடைக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |