அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் குறைய என்ன செய்யனும் தெரியுமா? இனி காபி, டீ குடிக்காதீங்க
இரத்த அழுத்த பிரச்சினையை இன்று பலரும் சந்திக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இரத்த அழுத்தம் குறைய எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளது.
நடைப்பயிற்சி
இந்த இரத்த அழுத்தம் குறைய தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.
எடை குறைதல்
அதிக உடல் எடையும் கூட ரத்த அழுத்தம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே உடல் எடையைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும். எடை குறைக்கும் போது, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சரியான ரத்தப்போக்கிற்கு உதவும். இதன் மூலம், இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதிக்கு ரத்தம் சீராகப் பாய உதவும்.
புகை மற்றும் மதுப்பழக்கம்
புகை பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இரண்டும் இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பிடிப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணியாக உள்ளது. ஆல்கஹால் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே இந்த பழக்கங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
காபி குடிப்பதை தவிர்த்தல்
தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை தூண்ட செய்யும் காரணியாகும். எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ளவும்.
சீரான டயட்
சீரான உணவுப்பழக்கம் ரத்த அழுத்தம் குறைய உதவும். உணவில் பெர்ரி பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம், அதில் இருக்கும் பாலிபீனால்கள், உடல்நலத்தைக் காக்கும். உடல் நலம் நன்றாக இருந்தால் நமக்கு எந்த நோய்களும் தீண்டாது.
மெக்னீஸியம் அதிகம் உள்ள உணவுகள்
மெக்னீஸியம் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் ரத்தக் குழாய்க்கு நன்மை அளிக்கும். எனவே பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல், கோழிக்கறி, பயறு வகைகளிலும் மெக்னீஸியம் அதிக அளவில் உள்ளது.