ஸ்டோக்ஸ் வீசிய பந்து தாக்கி அவுஸ்திரேலிய வீரருக்கு ரத்த காயம்!
3வது ஆஷஸ் டெஸ்டில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து தாக்கி அவுஸ்திரேலிய ஓபனிங் பேட்ஸ்மேன் மார்கஸ் ஹாரிஸுக்கு விரலில் ரத்த காயம் ஏற்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டிலும் அவுஸ்திரேலிய வெற்றிப்பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 26 மெல்போர்னில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 185 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 50 ரன்கள் அடித்தார். அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைதொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
வார்னர் 38 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் அவுட்டானார். ஹாரிஸ் 20 ரன்களுடனும், லியோன் ரன் ஏதுமின்றி களத்தில் உள்ளனர்.
முதல் நாள் கடைசி ஓவரை இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் வீச, ஹாரிஸ் பேட்டிங் செய்தார்.
ஸ்டோக்ஸ் வீசிய ஓவரின் முதல் பந்து, ஹாரிஸ் கிளவ்ஸில் பலமாக தாக்கியது.
இதில், ஹாரிஸின் விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே, ஆடுகளத்திற்கு விரைந்து பிசியோ, ஹாரிஸ் விரலில் ரத்தம் வடிவதை நிறுத்த மருத்துவ உதவி அளித்தனர்.
Marcus Harris is bleeding from the finger after copping a short ball from Ben Stokes #Ashes pic.twitter.com/pDRZtYYOMN
— cricket.com.au (@cricketcomau) December 26, 2021
இதனால், ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பிறகு தொடர்ந்து விளையாடிய ஹாரிஸ், ஓவரின் கடைசி பந்தை பவுண்டரி விளாசினார்.