பிரித்தானியர்களை உலுக்கிய இரத்த முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... 2.7 மில்லியன் பவுண்டுகள் வரை இழப்பீடு
பிரித்தானியாவை உலுக்கிய இரத்த முறைகேட்டில் சிக்கியவர்களுக்கு தலா 2.7 மில்லியன் இழப்பீடு கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரணமாக தலா 220,000 பவுண்டுகள்
தொடர்புடைய விவகாரத்தில் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், தற்போது இடைக்கால நிவாரணமாக தலா 220,000 பவுண்டுகள் அடுத்த 90 நாட்களுக்குள் அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஆண்டு இறுதிக்குள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு நிவாரணமும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்தின் இழப்பீடு தொகையை எதிர்பார்த்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
பிரித்தானிய சுகாதார வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரிடர் என்றே இந்த விவகாரத்தை குறிப்பிடுகின்றனர். 1970 மற்றும் 1990 காலகட்டத்தில் 30,000 எண்ணிக்கைக்கும் அதிகமான நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட ரத்தத்தால் HIV மற்றும் hepatitis பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் இதுவரை 3,000 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினரும் இழப்பீடுக்கு தகுதியானவர்கள் என்றே கூறப்படுகிறது.
ரத்த முறைகேட்டால் HIV பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தலா 2,225,000 பவுண்டுகள் முதல் 2,615,000 பவுண்டுகள் வரையில் இழப்பீடு பெற வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
10 பில்லியன் பவுண்டுகள்
இதில் சிலர் HIV மற்றும் Hepatitis C அல்லது Hepatitis B பாதிப்புக்கு உள்ளானதால் அவர்களுக்கு 2,345,000 பவுண்டுகள் முதல் 2,735,000 பவுண்டுகள் வரையில் இழப்பீடு வழங்கப்படலாம்.
ஆனால் இந்த இழப்பீட்டு தொகையானது அதிகபட்சம் அல்லது குறைந்தபட்சம் என்ற கணக்கீடுக்கு உட்படாது என்றும், அரசு தரப்பில் ஒதுக்கப்படும் தொகைக்கு வரம்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், நிதி மற்றும் சமூக பாதிப்பு உட்பட ஐந்து தனித்தனி பிரிவுகளின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. மட்டுமின்றி பிரதமர் ரிஷி சுனக் சுமார் 10 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியதாக நம்பப்படுகிறது.
ஆனால் இழப்பீட்டு வழங்குவதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்ட 4,000 பேர்களுக்கு தலா 100,000 பவுண்டுகள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |