ஷேன் வார்ன் உயிர்விட்ட அறையில் ரத்தக் கறைகள்! தாய்லாந்து பொலிஸ் தகவல்
மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்ன், மார்ச் 4ம் திகதி Koh Samui-யில் அவர் தங்கியிருந்த வில்லா அறையில் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து தாய்லாந்து பொலிஸ் அதிகாரி Yuthana Sirisombat, வார்னுக்கு ஏற்கனவே இதய பிரச்சினை மற்றும் ஆஸ்துமா இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
52 வயதான ஷேன் வார்ன், சமீபத்தில் அவரது இதய பிரச்சினை தொடர்பாக மருத்துவரிடம் சென்றுள்ளார்.
குடும்பத்தினர் அளித்த தகவல் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, அவரது மரணத்தில் எந்தவித சந்தேகமுல் இல்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது என Yuthana Sirisombat கூறினார்.
இதனிடையே, ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் ரத்த கறைகள் காணப்பட்டதாக சூரத் தானி மாகாண காவல்துறை தலைவர் மேஜ்ர் ஜெனரல் Satit Polpinit தாய்லாந்து செய்தித்தாளான Matichon இடம் கூறினார்.
ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை தொடங்கிய போது, அவருக்கு இருமல் மற்றும் இரத்தப்போக்கு இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்ன் அறையில் ரத்த கறைகள் காணப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக Suratthani மருத்துவமனகை்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது அறையில் இருந்து கார்பெட், மூன்று துண்டுகள் மற்றும் ஒரு தலையணை ஆகியவற்றில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வார்னின் உயிரைக் காப்பாற்றும் தீவிர முயற்சியின் போது இந்த ரத்த கறைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.