வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது?
பொதுவாக சமையலில் சேர்க்கப்படும் வெங்காயம் உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.
இந்த வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
அது எப்படி என்பதை விரிவாக இங்கே காண்போம்
வெங்காயம் எப்படி சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது?
வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
குறிப்பாக வெங்காயத்தில் உள்ள இரண்டு முக்கிய கெமிக்கல்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வெங்காயத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சர்க்கரை நோயின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதுவும் இது சிறுகுடல், கணையம், எலும்பு தசை, கொழுப்பு திசு மற்றும் கல்லீரலில் உள்ள செல்களுடன் முழு உடல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
வெங்காயத்தில் உள்ள சல்பர் என்னும் சேர்மம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் எவ்வளவு வெங்காயத்தை சாப்பிட வேண்டும்?
- சர்க்கரை நோயாளிகளை ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கிறது. ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன.
- வெங்காயம் போன்ற ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை ஒரு நாளைக்கு 1 1/2 கப் சமைத்த வெங்காயம் அல்லது 1 கப் பச்சையான வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது.
- ஆனால் இதற்கு மேல் சாப்பிட்டால், அது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.