கணவனை கூறுபோட்டு சிமெண்டுக்குள் மறைத்த பெண்: மரண தண்டனை விதிப்பு

Uttar Pradesh
By Balamanuvelan Oct 16, 2026 09:02 AM GMT
Report

Muskaan Rastogi and her lover Sahil Shukla were sentenced to death: கணவனை கண்டம் துண்டமாக வெட்டி ட்ரம்முக்குள் அடைத்து சிமெண்ட் கலவையை ஊற்றி மறைத்த பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கணவனை கூறுபோட்டு சிமெண்டுக்குள் மறைத்த பெண்: மரண தண்டனை விதிப்பு | Blue Drum Case Accused Were Sentenced To Death

மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.

கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டிய பெண்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.

கணவனை கூறுபோட்டு சிமெண்டுக்குள் மறைத்த பெண்: மரண தண்டனை விதிப்பு | Blue Drum Case Accused Were Sentenced To Death

தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத், மார்ச் மாதம் 4ஆம் திகதி திடீரென மாயமானார்.

இந்நிலையில், ராஜ்புத்தின் மனைவியான முஸ்கன் ரஸ்தோகியும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுமாக சேர்ந்து ராஜ்புத்தைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு ட்ரம்மில் போட்டு, அதை சிமெண்டால் மூடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. 

கணவனை கூறுபோட்டு சிமெண்டுக்குள் மறைத்த பெண்: மரண தண்டனை விதிப்பு | Blue Drum Case Accused Were Sentenced To Death

ரஜ்புத்தைக் காணாமல் அவரது குடும்பத்தினர் அவரைத் தேட, அப்பா ட்ரம்முக்குள் இருக்கிறார் என ராஜ்புத்தின் மகள் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது உடலைக் கண்டுபிடித்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

8 மாதங்களாக நதியை சுத்தப்படுத்திய இளைஞர்; ஒரே மாதத்தில் குப்பையாக்கிய ஊர் மக்கள்

8 மாதங்களாக நதியை சுத்தப்படுத்திய இளைஞர்; ஒரே மாதத்தில் குப்பையாக்கிய ஊர் மக்கள்

மரண தண்டனை விதிப்பு

இந்நிலையில், கணவனைக் கொலை செய்த முஸ்கன் ரஸ்தோகிக்கும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுக்கும் புதன்கிழமையன்று மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

கணவனை கூறுபோட்டு சிமெண்டுக்குள் மறைத்த பெண்: மரண தண்டனை விதிப்பு | Blue Drum Case Accused Were Sentenced To Death

அத்துடன், அவர்கள் இருவருக்கும் கொலைக் குற்றத்துக்காக ஆளுக்கு 50,000 ரூபாய் அபராதமும், சாட்சியங்களை மறைத்ததற்காக 20,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டதும், அடுத்து என்ன என இருவரும் அதிகாரிகளைக் கேட்க, அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட முஸ்கனும் சாஹிலும் உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், முஸ்கனின் பெற்றோர், தங்கள் மருமகனான ராஜ்புத் ஒரு நல்ல மனிதர் என்றும், அவரைக் கொலை செய்த தங்கள் மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

முஸ்கன் சிறையிலடைக்கப்பட்டபின், அவரது பெற்றோர் தங்கள் மகளை ஒருமுறை கூட சிறையில் சென்று சந்திக்கவில்லை!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US