ட்விட்டருக்கு மாற்றாக புளூஸ்கை! எலான் மஸ்க்கிற்கு எதிராக களமிறங்கும் ஜாக் டோர்ஸி
தான் உருவாக்கிய ட்விட்டரை (Twitter) எலான் மஸ்கிடம் விற்றுவிட்டு, இப்பொது ட்விட்டருக்கு எதிராகவே புளூஸ்கை (BlueSky) எனும் புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார் ஜாக் டோர்ஸி.
புளூஸ்கை BlueSky
ட்விட்டரின் முன்னாள் நிறுவனர் ஜாக் டோர்ஸி (Jack Dorsey) புளூஸ்கை என்ற புதிய சமூக வலைப்பக்கத்தை உருவாக்கி, அதனை சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளூஸ்கை பற்றிய திட்டத்தை ஜாக் டோர்ஸி பல ஆண்டுகளாக கொண்டுள்ளார். 2019-ல் இந்த புதிய திட்டத்தை துவங்கினார். உள்நாட்டில் "புளூஸ்கி" என்று அழைக்கப்பட்ட இந்த முயற்சி ஒருபோதும் யதார்த்தமாக மாறவில்லை.
FirstPost
ஆனால் டோர்சி ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிறகு, அவர் சொந்தமாக தனது பழைய திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.
இந்நிலையில், புளூஸ்கை அதன் பீட்டா சோதனையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் புளூஸ்கை ஒரு "பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல்" என்று உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் புளூஸ்கை செயலியை அணுக விரும்பினால், நீங்கள் இணையதளம் வழியாகக் காத்திருப்போர் பட்டியலில் முதலில் சேர வேண்டும். பின்னர், ஆப்ஸின் பீட்டா பதிப்பு ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இப்போதைக்கு இது ஒரு இன்வைட் ஒன்லி அம்சமாகும். இன்னும் சிறிய காலத்திற்குப் பிறகு அனைவரின் பொது பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9to5Mac
டிவிட்டரைப் போன்றது
இது டிவிட்டரைப் போன்றது தான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளது. அதிபட்சமாக 256 எழுத்துகள் கொண்ட செய்தியை நம்மால் பகிர முடியும். அதோடு, படங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறையும் இதில் இருக்கிறது. டிவிட்டரைப் போலவே, "போஸ்டஸ் மற்றும் ரிப்ளை" ஆப்சன்களைக் கொண்டுள்ளது.
கால வரிசை அடிப்படையில் புதிய செய்திகளை பயனர்களால் பார்க்க முடியும். கொஞ்சம் டிவிட்டரைப் போலவே தோன்றினாலும், சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன.
விரைவில் இது டிவிட்டருக்கு போட்டியான தளமாக மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பொது பயன்பாட்டிற்கு வந்ததும் புளூஸ்கை செயலியை பயன்படுத்த பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
Credit: Andrew Harrer/Bloo
ஆப்பிள் ஸ்டோரில் புளூஸ்கை வெளியிடப்பட்ட பிப்ரவரி 17-ஆம் திகதியிலிருந்து தற்போது வரை 2000 முறை இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில், ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு எலான் மஸ்க்கிற்கு விற்றது மட்டுமல்லாமல், இப்பொது அதற்கு போட்டியாக ஜாக் டோர்ஸி மீண்டு களமிறங்கியுள்ளார். அவருக்கு இதில் ஆதரவும் அதிகரித்துவருகிறது.