ப்ளெண்டல் 186, ரச்சின் ரவீந்திரா 121 ஓட்டங்கள்: 490 ஓட்டங்கள் குவித்து நியூஸிலாந்து டிக்ளேர்
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 490 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரச்சின், ப்ளெண்டல் சதம்
நியூஸிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பெல்ஃபாஸ்ட்டில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணியில் டாம் லாதம் டக்அவுட் ஆக, கான்வே 4 ஓட்டங்களில் வெளியேறினார்.
36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் ப்ளெண்டல் கூட்டணி அதகளம் செய்தது.

சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 121 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இரட்டை சதம் நோக்கி பயணித்த டாம் ப்ளெண்டல் 186 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
அதிரடி காட்டிய டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 98 (129) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 490 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |