ரூ.1.20 கோடிக்கு வெளியான BMW i5 சொகுசு மின்சார கார்., Audi e-tron GT உடன் போட்டி
BMW இந்தியா BMW i5 M60 xDrive எனும் சொகுசு மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது BMW-வின் New Generation 5 series Sedan மின்சார பதிப்பாகும். இந்த சொகுசு மின்சார காரின் top-spec M60 வகையை மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 516 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
இதில், Dual Digital Display, Panoramic Glass Roof கூரை மற்றும் ADAS போன்ற மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
BMW-வின் EV வரிசையில் i4 மற்றும் i7-க்கு இடையில் இந்த i5 எலக்ட்ரிக் செடான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Audi e-tron GT மற்றும் Porsche Taycan-ன் entry level கார்களுக்கு பதிலாக இந்த காரை மலிவான விருப்பமாக எடுத்துக்கொள்ளலாம்.
BMW i5 M60 xDrive-ன் விலை
BMW i5 M60 xDrive-ன் விலை இந்தியாவில் ரூ. 1.20 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த காருக்கு 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் வரை உத்தரவாதம் வழங்குகிறது.
இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் முன்பதிவு நடைபெற்றுவருகிறது. மே மாதம் டெலிவரி தொடங்கும் என கூறப்படுகிறது.
BMW i5 M60 காருக்கு வரம்பற்ற கிலோமீட்டர்கள் அல்லது 2 வருட நிலையான உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகிறது, இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். இதன் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் வரை உத்தரவாதம் கிடைக்கிறது.
3.8 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகம்., 516KM Range
BMW i5 All wheel Drive விருப்பத்துடன் வருகிறது. இதில், இரண்டு அச்சுகளிலும் ஒரு மின்சார மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் அதிகபட்சமாக 601HP Power பவரையும், 795 NM Torque திறனையும் உருவாக்குகின்றன
BMW i5 எலக்ட்ரிக் கார் வெறும் 3.8 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் என்றும், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230kmph என்றும் நிறுவனம் கூறுகிறது.
BMW நிறுவனம் இந்த காருடன் 11KW Wall Charger-அது வழங்குகிறது மற்றும் 22KW AC Charger ஒரு விருப்பமாக விலைக்கு கிடைக்கிறது.
இந்த கார் 205kW DC சார்ஜிங் திறனைகொண்டுள்ளது, இதன்மூலம் காரை 10-80% சார்ஜ் செய்ய 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |