BMW M5 performance செடான் இந்தியாவில் அறிமுகம்., Mercedes-AMG C63 SE-க்கு போட்டி
BMW India நிறுவனம் BMW M5 performance செடானை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏழாம் தலைமுறை மொடல் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த M5 ஆகும்.
இந்த கார் 0-100 வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.
இதன் விலை ரூ.1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (completely built unit) விற்பனை செய்யப்படும்.
இந்த BMW M5 காரானது Mercedes-AMG C63 SE performance-உடன் போட்டியிடுகிறது. இந்த காரின் விலை ரூ .1.95 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
BMW M5, ஒருங்கிணைந்த LED DRLகளுடன் கூடிய மெல்லிய ஹெட்லைட், 5 சீரிஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் வடிவமைப்பும் அதிலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது.
புதிய BMW M5 ஆனது 4.4-litre twin-turbocharged V8 petrol engine மூலம் இயக்கப்படுகிறது, இது 585PS சக்தியையும் 750Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
அதே நேரத்தில், மின்சார மோட்டார் 197PS சக்தியையும் 280Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
ஹைப்ரிட் அமைப்பு 727PS சக்தியையும் 1000Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
மின்சார மோட்டார் 18.6kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கார் Pure EV Mode-ல் 69 கிமீ தூரம் செல்ல முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BMW M5 performance, BMW M5 7th Gen, BMW M5 performance in india, BMW M5 performance price