நாகப்பட்டினம்- யாழ்ப்பாணம் இடையே விரைவில் கப்பல் சேவை
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கும் இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக விளங்குகிறது.
உள்நாட்டுப் போரின் போது இப்பகுதியின் துறைமுகம் மிக கடுமையாக சேதமடைந்தது, இதனை சீரமைக்க இந்தியா சார்பில் 2018ம் ஆண்டு சுமார் 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதன்மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட கடந்த ஜீன் மாதம் திறக்கப்பட்டது.
இங்கிருந்து தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்திருந்த போது இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான தூரம் 110 கிலோமீட்டர் ஆகும்.
இந்த கடல் பரப்பை சுமார் 4 மணி நேரம் பயணத்தின் மூலம் அடையலாம், இதற்காக நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் கப்பல் சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |