பிரான்ஸ் கடற்கரையில் உடைந்து கிடந்த படகு: அதில் பயணித்த பிரித்தானியர் எங்கே?
தனது படகில் பயணித்த பிரித்தானியர் ஒருவர் பிரான்ஸ் கடற்பகுதியில் மாயமான நிலையில், அவரது படகு மட்டும் பிரெஞ்சு கடற்கரை ஒன்றில் கிடைத்துள்ளது.
படலில் பயணித்த பிரித்தானியர் எங்கே?
சனிக்கிழமையன்று, தென்மேற்கு பிரான்சிலுள்ள Lacanau என்னுமிடத்திலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் படகில் பயணிக்கும்போது, தான் பிரச்சினையில் சிக்கியிருப்பதாக தகவல் கொடுத்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
அதைத் தொடர்ந்து பிரான்ஸ் கடற்படை ஹெலிகொப்டர் ஒன்று அவரைத் தேடிச் சென்றுள்ளது.
அப்போது, பிரெஞ்சு கடற்கரை ஒன்றில் அவரது படகு மட்டும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. ஆனால், 73 வயதான அந்த பிரித்தானியரைக் காணவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை அவரைத் தேடும் பணி தொடர்ந்த நிலையில், புதிய தகவல் எதுவும் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |