Job: ரூ. 1 லட்சம் வரை சம்பளம்.., பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள முக்கிய பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
முதலீடு உறவுகள், நிதி செயல்பாடு, அந்நிய செலாவணி கையகப்படுத்தல் மற்றும் உறவு ஆகிய பிரிவுகளில் உள்ள தலைமை மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
- தலைமை மேனேஜர் பதவி- 30 முதல் 40 வயது வரை
- மேனேஜர் பதவி- 24 முதல் 36 வரை
- சீனியர் மேனேஜர் பதவி- 29 முதல் 39 வயது வரை
கல்வித்தகுதி
தலைமை மேனேஜர் பதவிக்கு பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். CA/MBA/EPGM அல்லது மேனேஜ்மெண்ட் நிர்வாகி ஆகியவை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். FOREX, CDCS / CITF/ஆகியவற்றில் சான்றிதழ் படிப்பு, MBA / PGDM ஆகியவற்றை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சீனியர் மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் சேல்ஸ், மார்க்கேட்டிங், நிதி, வங்கி ஆகியவற்றில் எம்பிஏ அல்லது பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அந்நிய செலாவணி குறித்து சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பள விவரம்
- மேனேஜர் - ரூ.64,820 முதல் ரூ.93,960
- சீனியர் மேனேஜர் - ரூ.85,920 முதல் ரூ.1,05,280
- தலைமை சீனியர் - ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940
தேர்வு செய்யப்படும் முறை
பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ளவர்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு ரூ.850 கட்டணம் பெறப்படுகிறது. SC, ST, PWD, ESM/DESM மற்றும் பெண்கள் ரூ.175 செலுத்த வேண்டும்.
கடைசி திகதி
இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் தொடங்கிய நிலையில், அக்டோபர் 9ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |