Job: ரூ.1 லட்சம் வரை சம்பளம்.., பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்
மேனேஜர், சீனியர் மேனேஜர், சீப் மேனேஜர் ஆகிய பதவிகளில் மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
மேனேஜர் பதவி 25 முதல் 30 வயது, சீனியர் மேனேஜர் பதவிக்கு 28 முதல் 35 வயது, சீப் மேனேஜர் பதவிக்கு 32 முதல் 42 வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நிதி அல்லது நிதி சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்
மேனேஜர் பதவிக்கு 3 வருடங்கள், சீனியர் மேனேஜர் பதவிக்கு 6 வருடங்கள் மற்றும் சீப் மேனேஜர் பதவிக்கு 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மேனேஜர் பதவி- ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சீனியர் மேனேஜர்- ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை சீப் மேனேஜர்- ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல்/நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுச் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் திகதி
விண்ணப்பம் தொடக்கம்- 10.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்- 30.10.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |