ஒரே ஒரு பாடல்... பிரபல பாடகருக்கு 9 ஆண்டுகள் விசா தடை விதித்த பிரித்தானியா
உகாண்டா எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இசை கலைஞருமான போபி வைன் நீண்ட 9 ஆண்டுகள் தடைக்கு பின்னர் தனது முதல் பயணத்தை பிரித்தானியாவில் மேற்கொண்டுள்ளார்.
ஒன்பது வருட விசா தடை
பிரித்தானிய அரசாங்கம் போபி வைனுக்கு எதிரான ஒன்பது வருட விசா தடையை நீக்கியதன் மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் பிரித்தானியா வந்துள்ளார். புதன்கிழமை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள போபி வைன், லண்டன் நகரமே, நீண்ட பத்தாண்டுகளுக்கு பிறகு என அதில் குறிப்பிட்டுள்ளார்.
@bobi wine
கடந்த 2014ல் போபி வைன் வெளியிட்ட Burn Dem என்ற பாடலே, அவரை சிக்கவைத்தது. இதன் காரணமாகவே பிரித்தானிய அரசாங்கம் அவருக்கு விசா மறுத்ததுடன் தடை விதித்தது.
குறித்த பாடலில் தன்பாலின மக்கள் மீதான தாக்குதல்களை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் குழு குற்றஞ்சாட்டியிருந்தனர்.
தடை இறுதியாக நீக்கப்பட்டது
பாடலை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே போபி வைனுக்கு பிரித்தானியாவில் விசா மறுக்கப்பட்டது, இதனால் அவர் லண்டனில் திட்டமிடப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது நவம்பர் 5ம் திகதி போபி வைன் வெளியிட்ட தகவலில், தாம் பிரித்தானியா திரும்ப நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள போபி வைன்,
பிரித்தானியாவில் நுழைவதற்கு எனக்கு எதிரான தடை இறுதியாக நீக்கப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் மிக விரைவில் பிரித்தானியாவுக்கு வரவுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |