34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்: புதிய தகவல்
Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இரண்டு பேருடைய உடல்கள் பனிப்பாறைகள் உருகியதால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்துக்கு சமீபத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், லோசான் நகருக்கு தெற்கே அமைந்துள்ள Trift பனிப்பாறையில் இரண்டு உடல்களைக் கண்டு, அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
தசாப்தப் பின்னணி
உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், அந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காண்பதற்காக DNA பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

அப்போது, அந்த உடல்கள் பெல்ஜியம் நாட்டவர்கள் இருவரின் உடல்கள் என்பது தெரியவந்தது.
அதாவது, 1992ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமாகியுள்ளார்கள்.
அவர்களுடைய உடல்கள் பனியில் புதைந்துபோக, சமீபத்தில் பனிப்பாறைகள் உருகியதைத் தொடர்ந்து 34 ஆண்டுகளுக்குப் பின், அந்த உடல்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன.
விடயம் என்னவென்றால், இப்படி பனிப்பாறைகள் உருகுவதால், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போனவர்களின் உடல்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது இதுதான் முதல்முறையாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |