இலங்கை பெண் உட்பட கரை ஒதுங்கிய 4 சடலங்கள்.., சென்னை கடற்கரையில் பரபரப்பு
சென்னை கடற்கரை பகுதியில் 4 பெண்களின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரை ஒதுங்கிய சடலங்கள்
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் 4 இளம் பெண்களின் சடலம் கரை ஒதுங்கியதாக அங்குள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின் அப்பெண்களின் உடல்களை மீட்ட பொலிஸார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் எனவும் அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள், சாலினி, வேதகி செல்வம், பவானி, காயத்ரி ஆகிய 4 பேர் என அடையாளம் காணப்பட்டது.
மேலும், தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர் எனவும் மற்ற 3 பெண்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        