எரியும் குப்பைத்தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்: சிறிது நேரத்தில் சரணடைந்த நபரால் தெரியவந்த உண்மை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், கடந்த வாரம் குப்பைத்தொட்டி ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்ட சிலர் பொலிசாருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து அதிரவைக்கும் செய்தி ஒன்று தெரியவந்தது.
தீப்பற்றி எரிந்த குப்பைத்தொட்டி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Austerlitz பாலத்துக்கு அடியில் குப்பைத்தொட்டி ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்ட சிலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். உடனே தீயணைப்புத்துறையினருடன் அங்கு வந்த பொலிசாருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஆம், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க, அந்த குப்பைத்தொட்டிக்குள் சூட்கேஸ் ஒன்று இருப்பது தெரியவந்தது. பொலிசார் அதை திறந்துபார்க்க, அதற்குள் ஒரு மனித உடல் இருந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த உடல், உடற்குறைபாடு கொண்ட ஒரு நபருடையது என்பது பின்னர் தெரியவந்தது.
Picture: AFP
சரணடைந்த நபரால் தெரியவந்த உண்மை
இந்த சம்பவம் நிகழ்ந்து சிறிது நேரத்துக்குள், 34 வயது நபர் ஒருவர் பொலிசில் சரணடைந்தார். அந்த சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த நபரை தான்தான் கொன்றதாக அவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட நபரை கவனித்துக்கொளும் பணியிலிருந்த அந்த நபருக்கும், கொல்லப்பட்டவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அவரைக் கொன்றுள்ளார் அவரைக் கவனித்துக்கொள்ளும் பணியிலிருந்த அந்த நபர்.
அவர்கள் இருவருடைய அடையாளங்களும் வெளியிடப்படாத நிலையில், பொலிசார் சரணடைந்த அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |