கனடாவில் காணமல் போன பெண்களில் ஒருவர் சடலமாக மீட்பு! உறுதிபடுத்திய பொலிசார்: வெளியான முழு விபரம்
கனடாவில் காணமல் போன பெண்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Central Ontario-வில் உள்ள Kawartha ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம், காணமல் போன பெண் ஒருவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் காணமல் போன 58 வயது மதிக்கத்தக்க Ava Burton என்ற பெண் என Durham பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மற்றொரு சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கடந்த 14-ஆம் திகதி Whitby-ஐ சேர்ந்த Ava Burton(58) மற்றும் இவரின் தாயார் Tatilda Noble (85) ஆகியோர் காணமல் போய்விட்டதாக கூறப்பட்டிருந்தது.
அதில் தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவர் அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
மேலும், இவர்கள் காணமல் போன சம்பவத்தின் காரணமாக Whitby-ஐ சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க Joshua Burton, என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டு கொலைக்கான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலமே காணமல் போனவர்கள் தான் இருந்தாலும் உறுதி செய்வதற்கு பொலிசார் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பொலிசார் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் பிரேதபரிசோதனை செய்த போது, பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.