சுவிஸில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம்.. விசாரணையில் புதிய திருப்பம்: சிக்கிய மூவர்
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Zezikon கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த 2018 ஜனவரி மாதம் இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் இசபெல்லா எனவும் அவருக்கு 20 வயது எனவும் கண்டறியப்பட்டது.
ஆனால் உடற் கூராய்வில் அது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் விசாரணை அதிகாரிகள் திணறினர்.
இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த வழக்கில் மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் குற்றச்சாட்டில், இசபெல்லா 2017 நவம்பர் 3ம் திகதியே மரணமடைந்துள்ளார் எனவும், நெதர்லாந்து நாட்டவரான 36 வயது நபரின் குடியிருப்பிலேயே இசபெல்லா சம்பவத்தன்று இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இசபெல்லா தனது உறவினர் மூலம் அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இசபெல்லா இறந்ததும் அந்த நபர் தமக்கு நெருங்கிய நண்பர்கள் இருவரை தொடர்புகொண்டு விவாதித்ததாகவும், இறுதியில் அவர்களின் உதவியுடன் ஒரு போர்வை மற்றும் ஒரு கம்பளத்தில் சடலத்தை புதைத்து, காரில் எடுத்துச் சென்று Zezikon கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் மறைவு செய்துள்ளனர்.
தற்போது இந்த மூவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான நெதர்லாந்து நாட்டவர் மீது, பலாத்காரம், கொலை முயற்சி, ஆயுதங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான சட்ட மீறல்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.