வெளிநாடொன்றில் மரணமடைந்த பிரித்தானியர்: உடல் மாயமானதால் பரபரப்பு
Mystery as body of Brit tourist who died in Cyprus Vanishes from morgue: வெளிநாடொன்றில் மரணமடைந்த பிரித்தானியர் ஒருவரின் உடல் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த 60 வயதுடைய பிரித்தானியர் ஒருவர் திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார்.
மரணமடைந்த பிரித்தானியர்
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவரது உடல் பிணவறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது உடலை பிரித்தானியா கொண்டுவரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
அவரது உடலைப் பெற்றுக்கொள்வதற்காக இறுதிச்சடங்கு மைய அலுவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட பிணவறைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவரது உடல் அங்கு இல்லை!
அதிர்ச்சியடைந்த அவர் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் அவரது உடலைத் தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
அப்போது, அந்த பிரித்தானியரின் உடல், வேறொரு ஆள் பெயரில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அப்படியானால், அந்த உடல் முதலில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதா, அல்லது ஆள் மாறாட்ட பிரச்சினையால் அவரது உடல் அங்கேயே இருந்தும் அந்த பிணவறை அலுவலர்கள் அவரது உடலைக் காணவில்லை என தவறாக கூறிவிட்டார்களா என்பது தெரியவில்லை.