மறுசுழற்சி ஆலையில் மர்மமாக கிடந்த மனித உடல் பாகங்கள்: பயத்தில் நடுங்கிய பிரித்தானிய தொழிலாளர்கள்
பிரித்தானிய மறுசுழற்சி ஆலையில் திங்கட்கிழமை கிடந்த மனித உடல் பாகங்களால் அதிர்ச்சி.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணை.
பிரித்தானியாவில் உள்ள மறுசுழற்சி ஆலையில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு யார்க்ஷயரின்(West Yorkshire) லீட்ஸில் பகுதியில் உள்ள ஸ்கெல்டன் ஸ்கிப்ஸ் (Skelton Skips) என்ற மறுசுழற்சி ஆலையில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முன்னதாக மனித உடல் பாகங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மனித உடல் பாகங்கள் ஆலைக்குள் கிடப்பதை பார்த்த மறுசுழற்சி ஆலை தொழிலாளர்கள் அச்சமடைந்து, உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
Ben Lack-YappApp
இந்த நிலையில் மறுசுழற்சி ஆலைக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணை மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பெயர் குறிப்பிடாத தொழிலாளி ஒருவர் தி சன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், ஆலையில் மனித உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், காவல்துறைக்கு அழைக்கப்பட்டது, இது மிகவும் கவலையளிப்பதாகவும், அதிர்ச்சியாகவும், சோகமாகவும் பயமாகவும் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
வெஸ்ட் யார்க்ஷயர் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்த தகவலில், இன்று காலை 9.57 மணிக்கு, (Leeds)லீட்ஸின் நோஸ்டோர்ப் வேயில் (Knowsthorpe Way) உள்ள கழிவு மறுசுழற்சி ஆலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
Ben Lack-YappApp
கூடுதல் செய்திகளுக்கு: ஒற்றை நாட்டிற்கு எதிராக…ஒன்றிணைந்த உலகின் முக்கிய மூன்று நாடுகள்: தொடங்கியது பயிற்சி
அதனடிப்படையில், எச்சங்களை மதிப்பிடுவதற்கும், சூழ்நிலைகளை நிறுவுவதற்கும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.