இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் போதும்! நோய் நொடி இல்லாத வாழ்க்கை
கீரைகளில் பலவகைகள் உள்ளன, எல்லா வகையான கீரைகளிலும் ஏதேனும் சத்துக்கள் நிச்சயம் நிறைந்திருக்கும்.
முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள் தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருக்கும் மூக்கிரட்டை கீரை குறித்து உங்களுக்கு தெரியுமா?
மூக்கிரட்டை கீரை யாரும் விதை போட்டு வளர்வதில்லை. தானாக வேலிகளில் சாதாரணமாக தரைகளில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும்.
இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.
சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு அதிமருந்தாகும்.
சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு அதிமருந்தாகும்.
உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க இந்த கீரை உதவி புரிகின்றது.
சிறுநீர்கடுப்பு பிரச்சனை உள்ளவர்கள் மூக்கிரட்டை கீரையை எடுத்து கொண்டால் சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு அது உதவும்.
மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு நம்முடைய ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இதன்மூலம் நீரிழிவு நோயில் இருந்து தப்பலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் நம்மை காப்பாற்றும்.