கனடாவில் இந்த உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: விரிவான பின்னணி
கனடாவில் வறட்சி காரணமாக கோதுமை விநியோகம் சரிவடைந்த நிலையில் பாஸ்தா உணவுப் பிரியர்கள் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோதுமை உற்பத்தி கடும் வீழ்ச்சி
கனடாவில் வறட்சி மற்றும் ஐரோப்பாவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் துரம் கோதுமை பயிர்களை சேதமடைந்துள்ளது. மாவு ஆலைகள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கான விநியோகம் சரிவடைந்துள்ளது.
@reuters
மேலும், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துரம் கோதுமை உற்பத்தி கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. இதனையடுத்து, இத்தாலியின் பிரபலமான பாஸ்தா தயாரிப்பாளர்கள் அவர்களின் முக்கிய மூலப்பொருளுக்காக துருக்கி போன்ற அசாதாரண சப்ளையர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் 20 கிலோகிராம் ரவை மாவின் விலை 19.15 கனேடிய டொலரில் இருந்து 24 சதவீதம் அதிகரித்து தற்போது 26 கனேடிய டொலருக்கு விற்பனையாகிறது என தெரிவித்துள்ள Continental Noodles நிறுவனம்,
Credit: globalnews
அரிசியின் விலையும்
ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக தக்காளிக்கும் அதிக விலை அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Continental Noodles நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான Vincent Liberatore தெரிவிக்கையில், வறட்சி காரணமாக விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார்.
சில்லறை விற்பனையில் பாஸ்தா விலை இந்த ஆண்டு ஐரோப்பாவில் 12% மற்றும் அமெரிக்காவில் 8% உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, இந்தியாவில் ஏற்றுமதி தடைகளைத் தொடர்ந்து மற்றொரு பிரதான உணவான அரிசியின் விலையும் கனடாவில் உயர்ந்துள்ளது.
@reuters
உலக அளவில் துரம் கோதுமை ஏற்றுமதியில் சரிபாதி கனடாவில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு அறுவடையானது கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது குறைவான அறுவடை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த ஆண்டு 4.3 மில்லியன் மெட்ரிக் டன் துரும் கோதுமையை கனேடிய விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |