தண்ணீர் தொடர்பில் கனேடிய நகரம் ஒன்றின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தண்ணீரில் உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, கனேடிய நகரம் ஒன்றின் சில பகுதிகளுக்கு தண்ணீர் பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது
மொன்றியல் நகரின் Dollard-des-Ormeaux (DDO) மற்றும் Pierrefonds ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரிவந்துள்ளதால், குடிப்பது, சமைப்பது, ஐஸ் தயாரிப்பது, செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மற்றும் பல் துலக்குவது ஆகிய விடயங்களுக்கு கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துமாறு இந்த பகுதி மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
தன்ணீரை குறைந்தது ஒரு நிமிடத்துக்காவது கொதிக்கவைத்து பிறகு பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்றபடி குளிக்க, துணி துவைக்க இந்த தண்ணீரை அப்படியே பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான் என்று கூறியுள்ள அவர்கள், குழந்தைகளை குளிக்கவைக்கும்போது மட்டும் அவர்கள் தண்ணீரை குடித்துவிடாமல் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.