உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: அணியில் திடீர் மாற்றம்..பந்துவீச்சு குழுவை அறிவித்த கேப்டன்
அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள பந்துவீச்சு குழுவை அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட்டின் இறுதிப்போட்டி நாளை ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டது. இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், அவுஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸும் தலைமை தாங்குகின்றனர்.
ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக வெளியேறியதைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர் வீரர் மைக்கேல் நேசர் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது.
AFP
பந்துவீச்சாளர் மாற்றம்
இந்நிலையில், அவருக்குப் பதில் ஸ்காட் போலந்து தான் ஹேசல்வுட்டிற்கு பதிலாக நாளைய போட்டியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார்.மேலும், அவர் தனது பந்துவீச்சு குழுவையும் அறிவித்துள்ளார்.
அதன்படி பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளனர்.
போலந்து குறித்து பேசிய கம்மின்ஸ்
வேகப்பந்து வீச்சாளர் போலந்து குறித்து கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், 'ஸ்காட்டியைப் போன்ற ஒருவர் இடம்பெறுவது என்பத மிகவும் எளிமையான விளையாட்டுத் திட்டம். அவர் நல்ல பகுதிகளில் தாக்குவார் (பந்துவீச்சு மூலம்) மற்றும் அங்கேயே நாள் முழுவதும் இருப்பார். பந்து உங்களுக்கான (போலந்து) வேலையைச் செய்யும் என்று நம்புகிறேன். அவர் இங்கே நல்ல பந்துவீச்சுகளை கொண்டுள்ளார். ஆனால் அவர் பந்து வீசும் போதெல்லாம் நன்றாக இருக்கிறார்' என தெரிவித்துள்ளார்.
AFP
ஸ்காட் போலந்து 7 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6/7 என்பது அவரது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.