46 வயதில் குழந்தை பெற்ற பாலிவுட் நடிகை.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இதோ!
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது 46 வயதில் குழந்தை வளர்ப்பு அனுபவம் குறித்து சோசியல் மீடியாவில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்தி சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னனி நடிகையாக விளங்கியவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் லக்ஷ்யா, சலாம் நமஸ்தே, தில் சாஹ்தா ஹை போன்ற பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் கடைசியில் 2018ஆம் ஆண்டு வெளியான பயாஜி படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான 'Fresh Off the Boat' இல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் திகதி Gene Goodenough என்பவரை திருமணம் செய்து கொண்டு கல்யாண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடிபெயர்ந்த ப்ரீத்தி ஜிந்தா தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்கு இந்தியாவிற்கு வருகை தந்து வருகிறார்.
சமீபத்தில் 46 வயதான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தங்களுடைய இரட்டை குழந்தைகளான ஜெய் மற்றும் கியா இருவரும் வாடகைத் தாய் மூலம் பிறந்ததை இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவித்து தங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கான டைப்பருடன் தனது இனிய நேரம் கழிவதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.