வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் குண்டு வெடித்து பிரித்தானிய நிபுணர் பலி
வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது, அந்த குண்டு வெடித்து பிரித்தானியர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் குறித்த துயரச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சாலமோன் தீவுகளில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது Stephen 'Luke' Atkinson (57) என்ற பிரித்தானிய வெடிகுண்டு நிபுணர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் இறுதிவாக்கில் அந்த தீவில் ஏராளமான குண்டுகள் விழுந்துள்ளன.
அவற்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக Stephenம் அவரது சகாக்களும் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு வெடித்துள்ளது.
அந்த குண்டு வெடித்ததில், Stephenஉடைய விலா எலும்புகள், தொண்டை மற்றும் உடலின் மேல் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Stephen சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Stephenக்கு 18 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பராக அவர் இருந்ததாகவும், Stephenஉடைய சகாக்கள் தெரிவிக்கிறார்கள்.