பிரான்சில் ஈரானிய தூதரகத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபர்., போர் பதற்ற சூழலில் பரபரப்பு
பிரான்சில் ஈரான் தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் பாரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் கூடிய ஜாக்கெட் அணிந்த ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் ஈரான் தூதரகத்திற்குள் நுழைந்தார்.
தன்னைத் தானே வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனையடுத்து, இந்த விடயம் தெரிந்தவுடன், ஈரான் துணைத் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணத்திற்காக இப்படி நடந்து கொண்டாரா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து ஈரான் தூதரகம் பகுதியில் உள்ள இரண்டு மெட்ரோ பாதைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் நடந்த இந்த சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran Israel Cold War, Iran Israel War, Iran Israel Conflict, France Iran consulate, Paris