ஜேர்மனியில் வெடிகுண்டு மிரட்டலால் தடைபட்ட ரயில் சேவை
ஜேர்மனியின் Deutsche Bahn நிறுவனத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சனிக்கிழமை இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Deutsche Bahn AG என்பது ஜேர்மனியின் தேசிய ரயில்வே நிறுவனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
வெடிகுண்டு மிரட்டல்
வியன்னாவிலிருந்து (Vienna) பாஸாவுக்கு (Passau) சென்ற Intercity Express (ICE) மற்றும் நியூர்ன்பெர்கிலிருந்து (Nuremberg) பாஸாவுக்கு சென்ற மற்றொரு ICE இரயில்கள் வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகியதாகக் கூறப்பட்டது.
இதில், வியன்னா-பாஸா ரெயில் சார்டிங் (Schärding) என்ற எல்லைப்பகுதியில் திட்டமில்லாமல் நிறுத்தப்பட்டது.
சார்டிங் ரெயில் நிலையத்தில் இருந்த 117 பயணிகளும், நிலைய வளாகமும் அச்சுறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.
கடும் குளிரால் பாதிக்கப்பட்ட பயணிகள் அருகிலுள்ள கார் டீலர்ஷிப்பில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.
மூன்று மணி நேர சோதனை
20 காவல்துறை அதிகாரிகளும், இரண்டு வெடிகுண்டு கண்டறியும் நாய்களும் மூன்று மணி நேரமாக ரெயிலை சோதனை செய்தனர். இதன் முடிவில், இது வெறும் பொய்யான மிரட்டல் என உறுதிப்படுத்தப்பட்டது.
மீண்டும் சேவை தொடக்கம்
சுமார் மூன்று மணி நேரம் கடந்த பிறகு, ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பாஸாவிலும் சார்டிங்களிலும் எந்த குண்டும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த மிரட்டல் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு திடீர் இடையூறை ஏற்படுத்திய போதிலும், அதிரடியாக நடவடிக்கை எடுத்து பொலிஸார் நிலைமையை அமைதிப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |