பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நேற்று, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, பள்ளிகள் திறந்த நிலையில், பாரீஸில் உள்ள 20 யூத பள்ளிகளில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத் தொடர்ந்து, பொலிசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அந்த பள்ளிகளில் சோதனை மேற்கொண்டார்கள்.
JNS
மாணவர்கள் வெளியேற்றம்
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். தங்கள் பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
NEW: 20 Jewish schools in Paris reportedly evacuated after bomb threat - The Jerusalem Post.
— Insider Paper (@TheInsiderPaper) October 30, 2023
இந்நிலையில், எந்த பள்ளியிலும் இதுவரை வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிசார் தொடர்ந்து சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |