அதிகாலையிலேயே தவெக தலைவர் விஜய் வீட்டில் பரபரப்பு
நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
சமீப நாட்களாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. அந்தவகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
சென்னை நீலாங்கரையில் அமைந்திருக்கும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் அதிகாலையிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது.
பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் அதிகாலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் அந்த தகவல் பொய்யானது என்று தெரியவந்தது.
இதையடுத்து, விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்த தகவலை விசாரித்து வருகின்றனர் பொலிஸார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |