பிரித்தானியா நோக்கி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: போர் விமானங்கள் சீறிப் புறப்பட்டதால் பரபரப்பு...
துருக்கியிலிருந்து பிரித்தானியா நோக்கி வந்த விமானம் ஒன்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப் புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியிலுள்ள Lincolnshire என்ற இடத்திலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் விமான நிலையம் நோக்கி நேற்றிரவு பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.
இரவு 8.00 மணியளவில், அந்த விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதாக எசெக்ஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்துளது.
உடனடியாக, Lincolnshireஇலிருந்து பிரித்தானிய விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு சீறிப் புறப்பட்டுள்ளன.
அவை நடுவானில் அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து, மான்செஸ்டர் செல்லவேண்டிய விமானத்தை, பாதுகாப்பாக லண்டன் விமான நிலையத்துக்கு அழைத்துவந்துள்ளன.
வழக்கமாக விமானங்கள் நிற்கும் இடத்திலிருந்து வெகுதொலைவில் அந்த விமானம் நிறுத்தப்பட, அங்கு தயாராக நின்ற பொலிசார் விமானத்தை சோதனையிட, பின்னர் விமானத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்ததாக எசெக்ஸ் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தெரிவிக்கிறது.