இலங்கை தமிழரான நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி!
இலங்கை தமிழரான நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் மருத்துவமனை ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் போண்டா மணி (58). கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல கலக்கலான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் போண்டா மணி.
இலங்கையை சேர்ந்த போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இந்நிலையில் இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் விரைவில் குணமாக வேண்டும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        